Pages

Thursday, March 24, 2011

அன்னை ....


தூசியா, துன்பமா

பகுத்தறிந்துவிடுவாள் !

எந்தன் கண்ணீர்த்துளிகளுக்கு 


அணு அசைந்தாலும் 

அறிந்திடுவாள் !

எந்தன் அம்மா 

ஓர் அகராதி...

நான் பெற்ற பட்டங்கள்..


உதறிவிட்டு போய்விட்டாள்!

திட்டிவிட்டு சென்றால் கூட

சிந்தித்துக்கொண்டு இருப்பேன்....

ஆனால் சொல்லி சென்றாள்

நாடகக்காரன், நம்பகமில்லாதவன் என்று....

கண்களே குளமாய்

அவள் பிம்பம்மட்டும் நீ...ங்காமல்..
 

ஆச்சர்யம் ஆனால் உண்மை ....


கடல் அலையும்
 இமைக்கும் நேரம் 

மௌனம் புரிகின்றன,

புரியாத புதிரான உன் 

சிரிப்பொலியை கேட்க

 பொறாமையுடன் அல்ல,

போட்டி போடும் எண்ணத்துடன் ...என் விதி..


காதலெனும் பழரசத்தில்
 
விசவார்த்தைகளால் கொல்வாள் என
தெரிந்திருந்தால்,

கலைந்திருப்பேன்

கருவிலேயே..

தற்போது கலைகிறேன்

அணு அணுவாய் ..


முதல் பொய் !!


முன்மொழிந்தேன்
அழித்துவிட்டேன்யென

என்னவளின் தொடர்பு எண்,
புகைப்படம்,  அனைத்தையும் ! 

வெறுத்துவிட்டேன்யென !
 என்னவள் மனநிறைவுக்காக, 

 மாறாக !

அனைத்தையும்

என்னவளின் நினைவுச்சின்னங்களாய் தாங்கி, 

கண்ணீர் அமிலத்தில் 

ஆழ்ந்து அழிந்துக்கொண்டிருக்கிறேன் ....

Wednesday, March 23, 2011

பார் பார்


ஆனந்தம் அள்ளித்தர
ஆயிரம் கண்கள் நோக்கினும்,

அன்பையும் ஆதரவையும் பொழியும் 

உந்தன் கண்கள் இன்றி.. 

பாலைவனமாய் எந்தன் இதயம் !

அதிர்ஷ்டசாலி ..என்னடி  உலககோப்பை,

உன் இதழ் பதிந்த

தேநீர் கோப்பையைவிட..

அன்பை சொல்கிறது அதுவும்கூட..

Tuesday, March 22, 2011

ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?


சாரை சாரையாய்

என்னைச்சுற்றி 

எறும்புகள் மொய்க்கின்றன 

ஏன் ?

உன்னைத்தானே நினைத்தேன் !

என் தேவதை....


கண்டதில்லை
கடவுளின் தூதுவரை,

கண்டேன்
காதலின்  தேவதையை !

என்னவளது அன்பு மட்டுமே

நிலைக்கச்செய்கிறது,

என்னை 

மதம் பிடித்த மனிதர்கள் 

மத்தியில்

       மனம் படைத்த மனிதனாகவே....   

Monday, March 14, 2011

எந்தன் காதல் போதும் ..

எல்லோரும் கேட்கிறார்கள் !

எப்படி வாழ்கிறாய் ?

காதல் தோல்வியில் ..

சொன்னேன்

காதலி மட்டுமே சென்றாள்,

விருப்பமில்லையென்று..

செல்லவில்லை எந்தன் காதல்

என்னவள் நினைவுகளுடன்..

நானே விரும்பினாலும்..  

Sunday, March 13, 2011

சுனாமி

கடலே !
தாகம் தீரவில்லையா ?
உணர்வே இல்லாமல் 
உட்கொள்கிறாய் 
எண்ணற்ற உயிகளை ....

 இருக்கிறாயா கடவுளே ?
வேடிக்கை பார்க்கிறாயா ?

 இரக்கமற்றவன் நீ * * * *Monday, March 7, 2011

பெண்ணியம் வாழ்க..


தன் சுகதுக்கங்களை மறைத்து 
சுற்றத்தாரின் திருப்திக்காக
வாழும் பெண்கள்,

தாயாக
சகோதரியாக
தோழியாக
காதலியாக
மனைவியாக
மகளாக
பேத்தியாக 

இன்னும் பல !

வாழ்க்கை சிறிதாயினும் 
பரிமாணங்கள் பல ஏற்று
நேசத்தை மட்டும் பொழியும் 
பெண்ணை நினைத்து

பெருமிதம் கொள்கிறேன் !

கடவுளுக்கு நிகரான
படைத்தலின் ஓர் அதிபதியான 
மகளிர்க்கு..

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..