Pages

Thursday, February 17, 2011

சின்ன சின்ன ஆசை..


ஒரே ஒரு கணம்
நின்று கேள்,
எனது பிரியங்களை மட்டும்..

நீ உறங்கும்போது
உன் கூந்தல் வருடும்
தென்றலாய் நானாக,
உன் புருவங்களுக்கு தீட்டும்
கண்மையாய்,
உன் இதழ்களை மெருகேற்றும்
உதட்டுசாயமாய்,
உன் பொன்முகம் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்,
உன் கூந்தல் உதிர்க்கும் பூக்களை
சேகரிக்கும் சேவகனாய்,

காவலனாய்
உன் இதழ்கள் பூக்கும் புன்னகைக்கு,
எத்ரியாய்
உன் விழிகள் பொழியும் மழைக்கு,
நிழற்குடையாய்
நடக்கும் என் நிலவுக்கு,
இருக்கையாய்
நடனமாடிவிட்டு இளைப்பாற,

நீயே முகவரியாய்
என் அன்புக்கு,
உயிராய்
என் சுவாசத்திற்கு,
கடிவாளமாய்
என் கோபத்திற்கு,
தேவதையாய்
என் மன வானில்,

மொத்தத்தில்
உன் காதல் தேசத்தில்
ஆயுள் கைதியாய்,
உன் பார்வை அறிந்து
செயல்படும் பணியாளனாய் ..

என்றும் நானே,
நான் மட்டும்..

No comments:

Post a Comment