Pages

Thursday, February 17, 2011

அரிது அரிது ...

அரிது அரிது

மானிடனாய் பிறத்தல் அரிது,

அதனினும் அரிது

மானுடனாய் இருத்தலும், இறத்தலும் 

அரிதோ அரிது..

என் தேடல்..


நிலையில்லாத வாழ்வில்
நிலையான என்னவளின் அன்பை
நித்தம் நாடுகிறேன்..

அழியாத தருணங்கள்...


நம் முத்தங்களின்
சப்தங்கள்கூட
வலம் வருகிறது , காற்றில்
தொலைந்த
உன் அன்பின் முகவரி தேடி..

என்னவள் ஓர் குழந்தை..


குழந்தை உள்ளம் கொண்டவள்
என்னவள்,

பெற்றோரை கண்டதும்
எனை கண்டும்காணாமல்
மகிழ்ச்சியாகிறாள்..

அவள் மகிழ்ச்சிதானே
என் சுவாசம்..

நான் ஏமாற்றுக்காரன்..


இரு வருட
அன்பு பரிமாற்றத்துக்குபின்
பட்டம் பெற்றேன்,
ஏமாற்றுக்காரன் என்று..
உண்மைதான்,
நிலவை காட்டி
குழந்தையை ஏமாற்றும் அன்னைபோல்
ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் நித்தமும்
எங்கே என்னவள் என்று
கேட்கும் என் மனதை
அவள் வருவாள் என..

நீ எதில் அடங்குவாய் ????


இல்லாதவன் மனிதன்,
இல்லை என்பவன்
பிச்சைகாரன்..

முடிவு செய்துகொள்..

என் காதல்..


காதல் உன்னோடு இருப்பது மட்டும் அல்ல,
உன்
நினைவுகளோடும் வாழ்வதும்தான்
என்
பகல் கனவுகளில்..

தென்றலாய் வந்தவள்,
அன்பின் வாசம் கற்பித்தவள்,
இன்று
சுவாசம் பறிக்கிறாள்..

காதலித்து பார்..


பொறாமையில் கடவுள்,
அவனைவிடவும்
புனிதம் தென்படுகிறதாம்,
காதலிப்பவரில்..

மனிதனை புனிதனாக்கும்
காதலை
காற்றை போல் சுவாசிப்போம்..

சின்ன சின்ன ஆசை..


ஒரே ஒரு கணம்
நின்று கேள்,
எனது பிரியங்களை மட்டும்..

நீ உறங்கும்போது
உன் கூந்தல் வருடும்
தென்றலாய் நானாக,
உன் புருவங்களுக்கு தீட்டும்
கண்மையாய்,
உன் இதழ்களை மெருகேற்றும்
உதட்டுசாயமாய்,
உன் பொன்முகம் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்,
உன் கூந்தல் உதிர்க்கும் பூக்களை
சேகரிக்கும் சேவகனாய்,

காவலனாய்
உன் இதழ்கள் பூக்கும் புன்னகைக்கு,
எத்ரியாய்
உன் விழிகள் பொழியும் மழைக்கு,
நிழற்குடையாய்
நடக்கும் என் நிலவுக்கு,
இருக்கையாய்
நடனமாடிவிட்டு இளைப்பாற,

நீயே முகவரியாய்
என் அன்புக்கு,
உயிராய்
என் சுவாசத்திற்கு,
கடிவாளமாய்
என் கோபத்திற்கு,
தேவதையாய்
என் மன வானில்,

மொத்தத்தில்
உன் காதல் தேசத்தில்
ஆயுள் கைதியாய்,
உன் பார்வை அறிந்து
செயல்படும் பணியாளனாய் ..

என்றும் நானே,
நான் மட்டும்..

சிறு விண்ணப்பம்..

நண்பனே !
ஓடி ஓடி உழைக்கிறாய்
உழைத்ததெல்லாம்
கடவுள் தந்த பரிசுதான்,

காணிக்கையின் பெயரில்
வாரி வாரி வழங்குகிறாய்
பட்டுபுடவையாய், பஞ்சாமிருதமாய்,
பாலபிசேகமாய், இன்னும் பல....

நிறுத்திக்கொள்,

நிபந்தனை விதிப்பதற்கு
கந்துவட்டிகாரர் அல்ல, கடவுள்.

எண்ணிக்கொள்,
உன்னை கடவுளின் தூதுவன் என்று.
நீ பெறுவதை
வரியவருக்கும், இயலாதவருக்கும்
உதவு..
சொர்க்கமயமாகும் உன் வாழ்வு..

வாழ்வித்து வாழ்..