Pages

Monday, October 10, 2011

நடைபிணமாய் நான் !!

கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம்

என்னவளுக்கு பொருத்தம் இல்லையென்று 
நான் ஒதுக்கிய
சிலை அணிந்த சேலை
சிரிக்காமல் சிரிக்கிறது !
 
உயிர் கொண்ட சிலை 
என்னைப்பார்த்து !!!!

என்னவள் காதலை ஒதுக்கி சென்றபின் !!

Friday, September 30, 2011

அன்பின் விதை !


கடுகளவு நினைவுகளைகூட 

கண்ணீரில் கரைக்கநினைக்கிறேன் !

ஏனடி !

கணத்திற்கு கணம்,

மலையளவு உயர்ந்து 

விஸ்வருபம் எடுத்து 

படர்கிறது 

உந்தன் நினைவுகள் !

     எந்தன் உயிரில்  ....Sunday, August 28, 2011

நிஜதைப்பிரிந்த நிழல்


உன் நினைவுகள் 
நித்தமும் நீந்த 
கடல் அமைக்கிறேன் !

எந்தன் கண்களில்
கண்ணீரால் !!காதல் பரிசு !


நீ வெறுத்த பின் !

காதல் விதைகள்
வித்திட்டு  
வேருன்றி படர்கிறது 
எந்தன் இதயத்தில் !

உதிரமே உணவாய்,
வேதனைகளை மட்டும் கனியாய்  ? ! ?

Saturday, August 13, 2011

உயிர்த்தோழியே !

எந்தன் இதழ்களில் 
வார்த்தைகளாவேன் என்றாய் !
தூசி துரத்தினால்கூட 
முகம் சுழித்துவிடுவாய்!

அறிமுகம் செய்தாய் 
எனக்கே என்னை,
நம்பிதானே தொடங்கினேன் 
காதல் பயணத்தை 
கனவுகளின் துடுப்பில்,
கல்லறைவரை வருவாயென !

கட்டினாய் 
ஆசை வார்த்தைகளால் 
ஆனந்த மாளிகை,
உணர்வுகள் சங்கமித்தபின் 
என்ன ஆச்சு உனக்கு  ? !

தவிர்த்தாய் பேச்சை
வெறுத்தாய் என்னை
வெட்கமாய் இருக்கிறதென்றாய்
என்னுடனான உறவை,

இதயத்துடிப்பை அறிந்ததே 
உந்தன் அன்பில்தானே
பிறகெப்படி நடிப்பாகும் 
 காதல் ! !!!! !!! ??

சுயமதிப்பையிழந்து 
மன்றாடினேன் மன்னிப்புகோரி 
 உந்தன் உறவின்மீதுள்ள பற்றால்,
உனக்கேன் புரியவில்லை ? !

 உந்தன் கைப்பிடித்து 
எந்தன் பெற்றோருக்கு 
தேவதையை பரிசளிப்பேன் என்ற 
 நம்பிக்கை நலிவுற்றது 

கனவுகள் கரைந்தன
நினைவுகள் நிர்கதியாயின 
குற்ற உணர்ச்சி குடைகிறது 
 எந்தன் செல்களை !

உள்ளமும் உடலும் 
அணுக்கதிர் உலையாய்
வெடிக்கிறது அன்றாடம் !

உறைந்துபோனது உதிரம் 
உருகுகிறது கண்ணீராக !

உன்னை அடையும் 
அனைத்து முயற்சிகளும் 
தோற்றன 
 "பொருத்தமில்லை" என்ற
 உந்தன் வார்த்தையால் >

இருவருடம் அன்பில் மூழ்கியபின் 
கரைப்பான் தேடுகிறாய் 
காதலை கரைக்க,
சொல்லியிருந்தால் 
விலகிச்சென்றிருப்பேன்.
கொன்றுவிட்டாய் 
என்னையும், என் காதலையும்
கொச்சையாக பேசி !

மனசாச்சியிடம் மண்டியிட்டு 
யாசிக்கிறேன் பாவமன்னிப்பு,
தினந்தோறும் 

நீ ஏசிச்சென்றாலும் 
உன்னுடன் வாதாடி 
எந்தன் காதலை
வலுவிலக்கச்செய்ய 
ஒப்பவில்லை மனம் 
 உயிர்த்தோழியே !

காதலின் உச்சத்தில் 
உயிர்மாய்க்க துணிந்தபோது 
உடன்வர முயன்ற 
எந்தன் படைப்பாளிகள் 
உணரவைத்தனர் 
அன்பின் எல்லை 
அன்னை-தந்தை மட்டுமே,,

 நிரூபிக்க காதல்
பரிசோதனை அல்ல, 
உணர்ந்தேன் ! உருகினேன் !
உனக்காக !
வாழ்வேன் எந்தன் விதிவரை 
 என்னில் உள்ள உந்தன்
நினைவுகளை வாழவைக்க !

! அனைத்தும் அவன் அறிவான் !

உயிர்த்தோழியே !

வெறுக்க மனமின்றி  !

 என்றுமே நீ எந்தன்
"முதல் குழந்தை"

Tuesday, June 28, 2011

விருப்பமே, விருப்பமில்லை..

 
இதமான இமைகளை 

இறுக்கமாக மூடி, 

சேகரிக்கிறேன்,

உனக்காக சிந்தும் கண்ணீர்த்துளிகளைகூட !
  

Tuesday, May 31, 2011

ஒழிப்போம் ! ஒழிப்போம் !

கோசமிடுகிறோம், 

ஒழிப்போம் ! ஒழிப்போம் !

குழந்தை தொழிலாளர்களை,

ஒழித்துத்தான் வைக்கின்றனர்

இவர்களும் ....


இடம் : சரவணா ஸ்டோர்ஸ் - சென்னை

Thursday, May 26, 2011

பயணம் முழுதும்

இச்சையில்லை இளைப்பாறுவதற்கு ,

கவலையில்லை களைப்பைப்பற்றி , 

எந்தன் வாழ்க்கை பயணத்தில் !

படர்ந்திருக்கிறது என்னவள் நினைவுகள் ,.,. 

உன் தரிசனத்திற்காக..

தெருவில் உலாவும் 

பகல் காவல்காரன் 

நான் !!

பெண்பூவே 
பூக்களின் புனைப்பெயர்  

உன் பெயரோ !

அழைக்கும் நேரங்களில் 

மனம் பரப்புகின்றன 

எந்தன் மனதில் !!

விதிகாத்திருந்தேன்

அவளின் காதலுக்காக  !

பொறுமை இழந்து 

அழைத்தான் எமன் 

அவனது கடமைக்காக !!

தோல்வி


நாள்தோறும் 

உன்னை மறக்க எண்ணி,  

மறக்காமல் நினைக்கிறேன் !

விசாலமான வினாடியில்....

வரமாய் ஓர் சாபம்


எண்ணற்ற அடிகள் தோண்டியும் 

தென்படாத நீரைப்போல் இருந்த 

 எந்தன் கண்கள் !

நீ என்னைவிட்டு விலகிச்செல்ல 

ஓர் அடி எடுத்தாய்,

ஒரே ஓர் அடி !!


உருவானது நீரின் ஊற்று 

எந்தன் கண்களில்

குருதியாய் !!!

Monday, May 23, 2011மழை பெய்த நிலமாய் 

எந்தன் இதயம் 

உன் அன்பில்..