Pages

Thursday, December 23, 2010

தனிமையிலும் இனிமை..


நினைவுகளே
உணவாய்,
கனவுகளே
துணையாய்,
பயணிக்கிறேன்
நம் காதலில்....

நான் நானாக இல்லை..


பகலில்
உன் நினைவுகள்,
இரவில்
உன் கனவுகள்,
பகலும் இரவும்
சிறைபிடிக்கின்றன
மொத்தத்தில்
நான் நானாக இல்லை...

Sunday, December 12, 2010

நான்...


சுயநலவாதியின் சுவாசம் காதல்
பொது
நலவாதியின் நோக்கம் மற்றவர்களின் மகிழ்ச்சி
சுயநலமுடைய
பொதுநலவாதி நான்...

Thursday, November 11, 2010

என்னை திருப்பி கொடு..


கட்டுப்பாடிழந்த கப்பலை போல்
தடுமாறிக்கொண்டிருக்கிறேன்
உன் நினைவலைகளில்..

Wednesday, November 3, 2010

காத்திருப்பேன் அவளுக்காக..

உலகமே எதிர்த்தாலும்
காத்திருப்பேன் காதலுடன்
என்னவளுக்காக
என்னவளின் நினைவுகளுடன்...

என் வானவில்...


வானவில்லை கண்டதுபோல
கண் இமைக்காமல்
ரசிக்கிறேன்
நீ அனுப்பும் ஒவ்வொரு எழுத்தையும்..
உன்னை காண்பது போல்...

Sunday, August 1, 2010

அதிசயம்


அலை போல் வாழ்கிறேன்
ஆனாலும் சிலையாகிறேன்
உன் அன்பின் முன்பு..
உன் இதழ்களை வருடவே
உண்ணாவிரதத்தில்
என் இதழ்கள் !!!

Saturday, June 26, 2010

உன்னாலே உன்னாலே..

நினைக்கும்போதெல்லாம்,

விக்கல் வருகிறதோ இல்லையோ !!!

இடி இடிக்கிறது

என் இதயத்தில்
 
நீ என்னை மறக்கும்போதேல்லாம்..

Tuesday, March 9, 2010

புரியாத காதல்


அவளது ஒரு நிமிட அதட்டலுக்காக
குறும்பு
செய்யும்
குழந்தையாகிறேன் ....

Thursday, February 18, 2010

உன்னைத்தேடி..

என்னவள் இதழ் வரிகளை
வருடசென்ற என் சுவாசம்
புயலாய்
வீசுகிறது..

அழுத்தம் அதிகம்தான்
அவளது
காதலுக்கு..