Pages

Monday, July 27, 2009

? ? ? ? ? ?

காதல் என்ற பெயரில்

அவள் எய்த அம்பு

இதயத்தை துளைத்தது !!


இலக்கேயில்லாமல்

என் இதயம்

கேள்விக்குறியாக ??

அதிகம் பேசும் மௌனம்...



என்னவளை  கடிந்துபேசினாலும் 

கவிதை என ரசிக்கிறாள் 

மௌனமாய்,

என்னவள் காதலைவிட

அவள் மௌனம் ஈர்க்கிறது

என்னை..

எனது கவிதை வரிகள்


பத்திரமாக பார்த்துகொள்

முதல் கவிதை வரிகளை,

என்னையும் கவிஞ்னாக்கிய

உன் இதழ்களை தான்..

Sunday, July 26, 2009

எங்கே மனிதநேயம்..?


யாசிக்காத கடவுளுக்கு

காணிக்கை என்ற பெயரில்,

வாரி வழங்குகிறாய்...

உன்னிடம் கையேந்துபவர்களுக்காக

யோசிக்கவே மறுக்கிறாய்..

இருக்கிறான் மனிதன்.

இல்லை மனிதநேயம் ?

Saturday, July 25, 2009

ஆயுள் தண்டனை...!

எங்கு சென்றாலும்
உன் சுவாசமே
என்னை சிறைபிடிக்கின்றது,
என் உலகமே.. நீயென்று ஆன பின்....