Pages

Friday, February 13, 2009

நேசிக்கிறேன்...

நான் உன்னைவிட்டு
விலகிச்செல்லும் போது ,
மௌனம் சாதித்து
என்னை கொல்லும்
உன் இதழ்களைவிட ,
அதிகம் பேசும் கண்களை
உன் கண்களை நேசிக்கிறேன்..


உன்னாலே உன்னாலே...


நுட்பமாய் நுழைந்து

தடங்களை ஏற்படுத்திவிட்டாய்

என் இதயத்தில்

அழிக்க முடியவில்லை என்னாலும்,

தடங்களை அல்ல,

தடம் பதிந்த என் இதயத்தை..

இவ்வுலகமே

என்னை சுற்றுவதாக உணர்கிறேன்,

உன் நினைவுகள்

என்னை தீண்டினாலே ....

Sunday, February 1, 2009

என் சுவாசமே...


இதயம் நின்றுவிடுமோ என
பயமாய் உள்ளது
இமைதுவிடதே, என் சுவாசமே...